நாடாளுமன்ற தேர்தல்: நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு

சென்னை:
ரிரு மாதங்களில்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அறிவித்துள்ளார்.

நாட்டின் 16வது மக்களவை முடிவடைய உள்ள நிலையில், 17வது மக்களவையை தேர்ந்தெடுக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய நாளை நண்பகல் 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட்டு உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கட்சிகளின் ஆலோசனை கேட்கப்படும் என கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி