டில்லி

ரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவுகள் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற உள்ளன. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11 அன்று 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற உள்ளன. அத்துடன் இந்த வாக்குப்பதிவுடன் அருணாசலப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இந்த 91 தொகுதிகளில் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, காஷ்மீரில் 2, பீகாரில் 5, மேற்கு வங்கத்தில் 2, அந்தமான நிக்கோபார் தீவுகளில் தலா 1 மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 6 தொகுதிகளை தவிர மீதம் உள்ள அனைத்து தொகுதிகளும் அடங்கும்.

இந்த வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த தொகுதிகளில் பல முக்கிய புள்ளிகள் களத்தில் உள்ளனர்.

மத்திய அமைசர்களான வி கே சிங், மகேஷ் சர்மா, சஞ்சீவ் குமார் பலியான் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். மற்றும் பாஜகவின் அஜய் பட், பி சி கந்தூரு, மத்திய அமைச்சர் சிராஜ் பாஸ்வான் உள்ளிட்ட பலரும் முதல் கட்ட வாக்குப்பதிவில் வேட்பு மனு அளித்துளனர்.

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங், அவர் மகன் ஜெயந்த் சவுத்ரி, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், பீகர் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மணிஜி, உள்ளிட்டோர் எதிர்கட்சிகளின் முக்கிய புள்ளிகள்  ஆவார்கள்.