சிம்லா:

இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குப் பதிவுக்கு முன் நடத்தப்பட்ட சோதனை வாக்குப் பதிவை அழிக்க மறந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.


வாக்குப்பதிவுக்கு முன்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சோதிக்க, முகவர்கள் முன்னிலையில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்படும்.

அவ்வாறு நடத்தப்பட்ட வாக்குகளை அழித்து விட்டு, வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஆனால், சோதனை வாக்குகளை அழிக்க மறந்த அதிகாரிகள், வாக்குப்பதிவுக்குப் பின் சில வாக்குகளை அழித்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகாரையடுத்து, இமாச்சலப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி தேவேஸ் குமார் விசாரணை நடத்தினார்.

5 வாக்குச் சாவடிகளில் இத்தகைய தவறை செய்த 20 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார்.

20 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.