கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் 3 வேட்பாளர்களை மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி: மார்ச் 31-க்குள் நடவடிக்கை எடுப்பதாக பிரியங்கா காந்தி உறுதி

லக்னோ:

கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்து, மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரித்து முடிவு அறிவிக்கப்படும் என பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.


கிழக்கு உத்திரப்பிரேதசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஒரு தரப்புக்கு ஆதரவாக தலைவர்கள் செயல்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

சந்த் கபீர் நகர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் லால்கஞ்ச், பன்ஸ்கான் மற்றும் கோரக்பூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களின் உருவப் பொம்மையை எரித்தனர்.

இதனையடுத்து, அதிருப்தியாளர்களை அழைத்து பிரியங்கா காந்தி விசாரித்துள்ளார். புகார் குறித்து விசாரித்து மார்ச் 31-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.