லக்னோ:

நான் மோடி என்று சொல்வதல்ல தேசபக்தி. நாட்டை நேசிப்பதே தேசபக்தி என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.


தேசியம் பற்றி பாஜகவும், பிரதமர் மோடியும் பேசிவருவதற்கு பதில் அளித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நான் மோடி என்று சொல்வது எத்தகைய தேசியம். தேசப்பற்றும் நாட்டை நேசிப்பதுமே தேசியம்.

நாடு என்பது என்ன? மக்களும் அவர்களது அன்புமே நாடு.
உங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதா தேசியம். பணத்தை கொடுத்து ஆட்களை அழைத்து வந்து,எதையாவது பேசுவது பிரதமர் மோடிக்கு எளிதாக இருக்கிறது.

மக்கள் பிரச்சினையை தீர்ப்பதே உண்மையான தேசப்பற்று. எதார்த்தம் வித்தியாசமானது. நீங்கள் மக்களிடம் பேசும்போது மாறுபட்ட கருத்து எதிரொலிக்கிறது.

இந்த கருத்தை பிரதமரோ அல்லது பாஜக தலைவர்களோ ஏற்றுக் கொண்டது கிடையாது.

வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்ற மோடி, இதுவரை ஒரு கிராமத்துக்காவது வந்திருப்பாரா? மக்களிடம் பிரச்சினை குறித்து கேட்டிருப்பாரா?
மக்களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது என்றார்.