அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தால் அரசியலுக்கு முழுக்கு: பஞ்சாப் அமைச்சர் சித்து

லக்னோ:

.பி.யில் சோனியாகாந்திக்கு  ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ரோஜ் சிங் சித்து,  அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தால், தான் அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன் என்றுசவால் விட்டார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ரோஜ்சிங் சித்து, ஏற்கனவே பாரதியஜனதா கட்சியில் உறுப்பினராகி,   பின்னர் கட்சியின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தால், அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பின்னர்  பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய சித்து, அதில் வெற்றிபெற்று தற்போது மாநில அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

இவர் தற்போது  காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது, உ.பி. மாநிலத்தில் போட்டியிடும் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

ரேபரேலி தொகுதியில் சோனியாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சித்து, ராஜீவ் படுகொலைக்கு பிறகும், காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று சோனியா காந்தி நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்ததாக புகழாரம் சூட்டினார். தேசியவாதம் என்ன என்பது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியிடம் இடம் இருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி தோல்வி அடைந்தால், தான் அரசியலில் இருந்து விலகிவிடுகிறேன் என்று பாஜகவுக்கு சவால் விட்ட சித்து, காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 70 ஆண்டு காலமாக நாடு பொருளாதார வளர்ச்சியில்  முன்னேறவில்லை என்று மோடி தொடர்ந்து  பொய் பேசி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சிறிய ஊசி முதல் பெரிய விமானம் வரை அனைத்தும் நமது நாட்டியிலேயே உருவாக்கப்பட்டது என்று பேசியவர், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடைபெற்றதாக கூறினார்.

ஆனால், மோடியின் ஆட்சியில் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் தேச பக்தர்கள் என்றும், அவருக்கு எதிராக பேசுபவர்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டிய சித்து,

இந்த தேர்தலில் மோடி படுதோல்வி அடைவார் என்றும்  ரஃபேல் ஒப்பந்த ஊழல் விவகாரம் பாரதியஜனதாவுக்கு பெரும் தோல்வியை  கொடுக்கும் என்றும் விமர்சித்தார்.