மும்பை:

ஊழலுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மகாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.


தேர்தல் பிரச்சாரத்தில்  ராஜ் தாக்கரே பேசியதாவது;

2014 தேர்தலுக்கு முன்பு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்த பாஜக, இப்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மகாராஷ்ட்ராவில் 70 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பாஜக தலைவர் அமீத்ஷா கேட்கிறார். நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு முறைகேடு நடந்ததா? அல்லது உங்கள் அரசியல் லாபத்துக்காக அப்படி பேசுகிறீர்களா?

சிவசேனா- பாஜக அரசு நீர்ப்பாசன துறைக்கு பல கோடிகளை செலவு செய்துள்ளனர். பின்னர் 28 ஆயிரம் கிராமங்கள் ஏன் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன?

செலவு செய்ததாகக் கூறப்பட்ட பணம் எல்லாம் எங்கே போனது? ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அஜீத் பவாரும், சுனில் தாக்கரேயும் தற்போது சுதந்திரமாக திரிகிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராபர்ட் வாத்ரா மீது நடவடிக்கை எடுப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால் அதற்கான அறிகுறிகளே இல்லை என்றார்.