20தொகுதிகளுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மார்க்சிய கம்யூனிஸ்டு…

டில்லி:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 8ந்தேதி வெளியிட்ட நிலையில், இன்று 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

முதல் பட்டியலில் 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, 20 வேட்பாளர்கள் கொண்ட 2வது பட்டியலை  சிபிஐ (எம்) தலைவர் பிமன் போஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் ஆந்திர பிரதேசத்தில்  கர்னூல் தொகுதி பிரபாகர ரெட்டியும், தெலுங்கானாவில் 2 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட், கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 13 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில்,53 இடங்களில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ள மார்க்சிய கம்யூனிஸ்டு, இதுவரை 35 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.