லோக்சபா எம்.பி.க்கள் தினமும் 5 கேள்விகள் மட்டுமே கேட்காலம்…புதிய விதி

டில்லி:

லோக்சபாவில் எம்.பி.க்கள் நாள் ஒன்றுக்கு தலா 5 கேள்விகள் மட்டுமே இனி கேட்கும் வகையில் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

லோக்சபா எம்.பி.க்கள் தினமும் 10 கேள்விகள் வரை கேட்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த விதிமுறை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வரும் லோக்சபா கூட்டத்தொடரில் இருந்து எம்.பி.க்கள் தினமும் 5 கேள்விகள் மட்டுமே கேட்க முடியும். சபாநாயகரிடம் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தால் மட்டுமே 10 கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.