டெல்லி: பாராளுமன்ற லோக்சபா சுயேச்சை உறுப்பினர்  மோகன் டெல்கர் லாட்ஜில் மர்மமான இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.  அவரது மர்ம மரணம், தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் எம்பியான மோகன் டெல்கர் (வயது 58) மும்பையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலான மரைன் டிரைவில் ஹோட்டல் சீ கிரீனில்  தங்கியிருந்த நிலையில், தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் சோதனையிட்ட காவல்துறையினர் அங்கிருந்து, குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட  கடிதம் ஒன்றை கைப்பற்றியதாகவும், அதில் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோகன் தேல்கர் 1986’ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். 1986-89 வரை, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தார். டெல்கர் 1989 ஆம் ஆண்டில் 9’வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1990-91 காலகட்டத்தில், அவர் துணை சட்டங்கள் தொடர்பான குழுவில் உறுப்பினரானார். பின்னர் அவர் பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலின பழங்குடியினரின் நலன் குறித்த குழுவில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மகக்ளவை தேர்தலில் சுயேச்சையாக  போட்டியிட்டு மீண்டும் மக்களவை உறுப்பினரானார்.

செப்டம்பர் 2019 முதல், அவர் பணியாளர்கள், பொது குறைகளை, சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்தார், பின்னர் உள்துறை அமைச்சகத்தில் உள்ள ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக சர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் மும்பையில் உள்ள ஹோட்டலில் மரமமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அவரது அறையிலிருந்து தற்க்கொலைக்குறிப்பு மீட்கப்பட்டுள்ளது. எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மறைந்த டெல்கருக்கு  மனைவி கலாபென் டெல்கர் மற்றும் அபிநவ் மற்றும் திவிதா என இரு குழந்தைகள் உள்ளனர்.