பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகளில் 205 மசோதாக்கள் நிறைவேற்றம்: மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தகவல்

டில்லி:

பாஜக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில்  205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்றத்தின் 16வது கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இனிமேல் 17வது கூட்டத் தொடர் புதியஆட்சி அமைக்கப்பட்ட பிறகு அமைக்கப்படும்.

இந்த நிலையில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியி அரசின்  5 ஆண்டு காலத்தில் 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்து உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பாராளுமன்ற கூட்டத் தொடரும், பாராளுமன்றத்தின் 16வது கூட்டத்தொடரும் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து , பாராளுமன்ற 17வது மக்களவையை உருவாக்கும் வகையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டு காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்து உள்ளார்.

ஜிஎஸ்டி, கருப்பு பணம் தடுப்பு உள்ளிட்ட 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 1612 மணி நேர பாராளுமன்ற விவாதத்தில், 331 அமர்வுகள் நடைபெற்றதாகவும், சுமார் 422 மணி நேரம் இடையூறு காரணமாக வீணானதாகவும் தெரிவித்து உள்ளார்.