Random image

லோக்சபா தேர்தல் 2019: அறிக்கை தயாரிக்கும் பணியில் குதித்தது காங்கிரஸ் கட்சி

டில்லி:

டுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.

தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதியஜனதா கட்சி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் அரியணை ஏற வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. தேர்தல் அறிக்கை அனைத்து மாநில மக்களையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்றும், வலுவான வெற்றியை பெற உறுதுணையாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்  என்று கருதி, அதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கமிட்டி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 25ந்தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில்  பல துறைகள் சம்பந்தப்பட்ட நிபுணர்கள்,  முன்னாள் மத்திய மந்திரிகள் ப. சிதம்பரம், சல்மான்குர்ஷித், ஜெயராம் ரமேஷ், குமாரி செல்ஜா, அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர்சிங் பூடா, இளம் தலைவர்களான பஞ்சாப் மந்திரி மான்பிரித் பாதல், மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ், சச்சின்ராவ், முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கமிட்டியின் முதல் கூட்டம் நேற்று  டில்லியில் நடைபெற்றது. அதில், பாராளுமன்ற தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதில்,  இளைஞர்ககளின் வேலை வாய்ப்பு கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில்   வேலை வாய்ப்பு திட்டங்கள், சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் போன்றவை இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்தே தேர்தல் அறிக்கையின் இறுதி முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது.