Random image

தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

சென்னை:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

மசோதாவை தமிழக அமைச்சர்  ஜெயக்குமார் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

லோக் ஆயுக்தா அமைப்பை இதுவரை ஏற்படுத்தாத தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழக அரசு  லோக்ஆயுக்தா சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இன்று தமிழக சட்டமன்றத்தில்  லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

2018 தமிழக லோக் அயுக்தா என்ற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த மசோதாவில், முதல்வர், அமைச்சர்கள் உள்பட  உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ற்கனவே 17 மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் அமலுக்கு வந்து விட்டது. 18 மாநிலமாக தமிழத்தில் அமலாக உள்ளது. இந்த மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட்டு, இன்றே நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.