லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

மிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில்,  தமிழகஅரசு பதில் அளிக்க  உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் உள்பட  மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டு வரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால்  அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநிலந்தோறும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு நவம்பர் 29ந்தேதி, லோக் ஆயுக்தா பணிகள் தொடங்கி விட்ட தாக  தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டது. அதன்படி,  லோக் ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், சட்டமன்ற சபாநாயகர், முதல்வர்  எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, தமிழக  லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ். உறுப்பினர்களாக  ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தியும், சட்டத் துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமும், ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தா அமைப்பானது, பல்லும் இல்லாத, பவரும் இல்லாத , அச்சடித்த பதுமை போன்றுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, மனுவுக்கு பதில் அளிக்க தமிகஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.