2019 பிப்ரவரியில் லோக்ஆயுக்தா: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி

டில்லி:

மிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் எஎன்று  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் லோக்ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு, சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்னும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து கடந்த விசாரணையின்போது உச்சநீதி மன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்து 2 மாத காலம் அவகாசம் வழங்கியது.

லோக்ஆயுக்தா தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி   ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசை கடுமையாக சாடிய நீதிபதிகள்,  லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு 2 மாத கால அவகாசம் அளித்தும், லோக் ஆயுக்தா தலைவர் யார்? என்பது உள்ளிட்ட தகவல்களை இதுவரை தமிழக அரசு அளிக்கவில்லை. லோக் ஆயுக்தாவை அமைக்க தமிழக அரசுக்கு விருப்பமில்லையா என கேள்வி எழுப்பினர் இதுகுறித்து பிற்பகல் விசாரணை யின்போது தெரிவிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து விசாரணை மீண்டும் பிற்பகல் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டதுடன், 3 மாத கால அவகாசமும் கோரப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு விடும் என்றும் உறுதி கூறப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  3 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.