3மாதத்திற்குள் லோக்ஆயுக்தா: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி:

மிழகத்தில் இன்னும் 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும்  அரசு அதிகாரி களின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும் லோக்ஆயுக்தா சட்டத்தை அனைத்து மாநிலங் களிலும் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் அமல்படுத்தாமல் இழுத்தடிக் கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக கடந்த   ஜூலை 10ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசுக்கு உச்சநீதி மனற்ம் கண்டனம்  தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது, இதை அடுத்தக்கட்ட விசாரணையின்போது உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டது.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்றும், அதற்குண்டான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் இதுவரை லோக்ஆயுக்தா அமைக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தமிழகஅரசு வேண்டுமென்றே காலம்  தாழ்த்துவதாகவும். லோக் ஆயுத்தா செயல்படுவதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்றும்  உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து.

லோக் ஆயுக்தா அமைப்பு எந்த அளவில் செயல்படுகிறது என்பதை இன்று மதியம் 2 மணிக்கு தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற விசாரணையை அடுத்து, மூன்று மாதங்களில் லோக் ஆயுக்தாவை தமிழகத்தில்  அமைக்க வேண்டும் என்றும்  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.