லோக் ஆயுக்தா: 2 மாதத்தில் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி:

மிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும் லோக்ஆயுக்தா சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் தாக்கர் செய்த பொதுநல வழக்கில்,  “கடந்த 2013 ம் ஆண்டே லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு, பின்னர் 2014-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனாலும் பெரும்பாலான மாநிலங்களில் இச்சட்டம் இயற்றப்படவில்லை” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 23ந்தேதி நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் அமல்படுத் தாத நிலையில், அதுகுறித்து 2 வாரத்திற்குள் பிரமாண பத்திரம்  தாக்கல் செய்யும் படி கடந்த ஏப்ரல் 19ந்தேதி  விசாரணையின்போது உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி இருந்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்,  தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்றும், அதற்குண்டான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை இன்று (ஜூலை) 10ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்த நிலையில், லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகஅரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், தமிழகத்தில்  லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள் ளது.

இந்த உத்தரவு புதுச்சேரி அரசுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.