‘அந்தகாரம்’ படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…!

--

அட்லியுடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்துள்ள படம் ‘அந்தகாரம்’ .

இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்னராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அமுதன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

https://twitter.com/Dir_Lokesh/status/1254027840070119424

இந்த படத்தை பார்த்த ‘ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார்.

“‘அந்தகாரம்’ படத்தைப் பார்க்கும் சிறப்பு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் இதுபோன்ற ஒரு புத்திசாலித்தனமான படத்தைப் பார்க்கவில்லை. விக்னராஜன் ப்ரோ நான் உங்கள் எழுத்தின் ரசிகன். சிறப்பான நடிப்பு அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷன். வாழ்த்துகள் அட்லி ப்ரோ. உங்கள் கையில் வெற்றிப்படம் ஒன்று உள்ளது” என பதிவிட்டுள்ளார் .