கமல்ஹாசன் 232வது படம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.. ராஜ்கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு

யக்குனர் லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி நடித்த ’கைதி’ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. விஜய் நடித்த ’பிகில்’ படத்துடன் டஃப் பைட் கொடுத்து ’கைதி’ ஹிட்டானது. அந்த படம் கார்த்திக்கு பிரேக்காக அமைந்த தோடு லோகேஷுக் கும் பிரேக்காக அமைந்தது. அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ். மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ளது. தியேட்டர் கள் திறந்தவுடன் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது, கமல்ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. ஆனால் ரஜினி நடிக்கும் படம் தாமதம் ஆவதால் கமல் நடிக்கு படத்தி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்துக்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று லோகேஷ் அறிவித்திருந்தார். அதனபடி கமலின் ராஜ்கமல் நிறுவனம் அப்படத்தை அறிவித்திருக்கிறது. படத்துக்கு கமல்ஹாசன் 232 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் டிவிட்டர் மெசேஜில் ’எவனென்று நினைத்தாய்’ என ஹேஷ் டேக் உருவாக்கி இருக்கிறார். முன்னதாக இதுதான் டைட்டில் என்று கூறப்பட்டு வந்தது. இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Raajkamal Films International – Tamil Press Note

கார்ட்டூன் கேலரி