Random image

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து,லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள்…..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்துக்குப் பிறகு ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பான அறிவிப்பை சூசகமாக ஜீ தமிழ் விருது விழாவில் தெரிவித்தார் கமல். இந்தப் படம் ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது தயாரிப்பாக இருக்கவுள்ளதாகவும், இதில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துவிட்டு, தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.