லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் கமல் – ரஜினி கூட்டணி….!

ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்த விஜயின் ‘மாஸ்டர்’ படம் கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிப்போனது.

கொரோனா பிரச்சனை முடிந்து நிலைமை சீரான பிறகு தான் மாஸ்டர் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப் பணிகளை துவங்கிவிட்டார் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ரஜினி தான் ஹீரோ என கூறப்படுகிறது .

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதோடு இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் கமல் – ரஜினி கூட்டணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணையவுள்ளனர்.