சத்யா பாடலை வைரலாக்கிய லோகேஷ் கனகராஜ்: நெகிழ்ச்சியோடு பாராட்டிய கமல்ஹாசன்

சென்னை:
நடிகர் கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்தின் போட்டா படியுது படியுது பாடலை தற்போது சிறிய வீடியோவாக ரீமேக்கி செய்திருக்கிறார், சிம்பா படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர்.


இசைஞானி இளையராஜா இசையமைப்பில் இப்படாலை கமல்ஹாசன், சாய்பாபா, சுந்தர்ராஜன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். வேலைதேடும் பட்டதாரி இளைஞர்களின் பிரச்சனையை பேசிய இப்படம் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியானது. படத்தோடு பாடல்களும் பெரிய ஹிட் ஆகியது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி பாலசுப்ரமணியனும் லதா மங்கேஷ்கரும் பாடிய வளையோசை கலகலவென 80 ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் மட்டுமல்ல: 90 கிட்ஸ்களின் ஹிட் லிஸ்டிலும் உள்ளது.

ஏற்கனவே, நடிகர் அஸ்வின் அண்ணாத்த ஆடுறார் பாடலை த்ரட் மில் வாக்கில் ஆடி கமல்ஹாசனை குஷிப்படுத்தினார். இந்நிலையில், தற்போது சிம்பா பட இயக்குநர் போட்டா படியுது பாடலை கமலின் அதேகெட்டப்பில் அதே 80 களில் இருப்பதுபோல் காட்சியமைப்புகளை வைத்து அசத்தி இருக்கிறார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 61 வருட கமலிசம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல. மாறா அன்பு. இதற்கு பதில் பரிசு என் மாறா அன்பு மட்டுமாகவே இருக்க முடியும். என் நீண்ட பயணத்தில் அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான். என்னை இந்த மாரத்தான் ஓட்டத்தில் நீங்கள்தான் ஓட அனுமதித்தீர்கள். என் உந்துதல் நீங்கள்தான் என்று நெகிழ்வுடன் லோகேஷ் கனகராஜின் பதிவை பாராட்டி பகிர்ந்துள்ளார்.

You may have missed