தனது அடுத்த படத்தை அறிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்….!

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படம் குறித்தான அறிவிப்பு நாளை மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.