‘தளபதி 64’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் ‘தளபதி 63’ . அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை .

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை, ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகே விஜய் – லோகேஷ் கனகராஜ் படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.

இந்த படத்தை விஜய்யே தயாரிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kaithi, Lokesh Kanagaraj, Thalaathy 64
-=-