இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் உள்பட 12 மொழிகளில் எமோஜி வெளியிட்ட டிவிட்டர்

ந்தியாவில் நடைபெற உள்ள 17வது மக்களவைக்கான தேர்தலையொட்டி, பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் தமிழ் உள்பட 12 மொழிகளில் எமோஜிகளை வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க  இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் டிவிட்டர் எமோஜியை வெளியிட்டு அசத்தி உள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தின் புகைப்படத்தை கொண்டு வெளியாகியுள்ள இந்த எமொஜியானது (emoji) , இந்தி, ஆங்கிலம், பெங்காளி. அசாமி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்பட 12  மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த எமோஜியை  பயன்படுத்த விரும்பும் ட்விட்டர் பயனர்கள் தங்களது பதிவின் போது அதற்கான ஹேஸ்டேக்கினை பயன்படுத்த வேண்டும் என்றும்  தெரிவித்து உள்ளது.

#LokSabhaElections2019, #IndiaDecides2019, #IndiaElections2019, #लोकसभाचुनाव2019, #লোকসভানিৰ্বাচন, #લોકસભાચૂંટણી, #ಲೋಕಸಭೆಚುನಾವಣೆ, #ലോക്സഭാതെരെഞ്ഞെടുപ്പ്, #लोकसभानिवडणूक, #ଲୋକସଭାନିର୍ବାଚନ, #ਲੋਕਸਭਾਚੋਣਾਂ, #நாடாளுமன்றதேர்தல்,#లోక్‌సభఎన్నికలు, and لوک_سبھا_انتخابات#