போர் பதற்றம் இருந்தாலும் திட்டமிட்டபடி மக்களவை தேர்தல் நடக்கும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

லக்னோ:

இந்திய-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவினாலும், மக்களவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.


இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உத்திரப் பிரதேச மாநிலத்தில் 2 நாட்களாக முகாமிட்டுள்ளார்.

மாநிலத்தில் தேர்தல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தள்ளிப்போகுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, நாடு முழுவதும் சரியான நேரத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Timely Election, இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல்
-=-