மோடிக்கு லண்டனில் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு !

ண்டன்

ண்டன் சென்றுள்ள மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ள இங்கிலாந்து சென்றுள்ளார்.  சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.    இது குறித்து காஷ்மீர் வம்சாவழி பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் மோடி வரும் போது அவருக்கு மரியாதை கிடையாது என எச்சரித்து இருந்தார்.

தற்போது லண்டன் சென்றுள்ள மோடிக்கு இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.   கையில் பதாகைகளை ஏந்தியபடி அவர் செல்லும் வழியில் நின்று அவரை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.   ஆவர்கள் கையில் இருந்த பதாகைகளில் காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

அத்துடன் அவர்கள் “மோடி திரும்பிச் செல்லவும்” என எழுதப்பட்ட போஸ்டர்களகியும் அவர் வரும் போது தூக்கிப் பிடித்துஅவருக்கு காட்டினார்கள்.   இது குறித்து போரட்டக்காரர்களில் ஒருவரான வழக்கறிஞர் நவிந்திர சிங், “இந்தியாவில் தற்போது நடந்துள்ள இரு பலாத்கார நிகழ்வுகள் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   மோடி நான்கு ஆண்டுகளாக பதவியில் இருந்தும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை” என கோபத்துடன் கூறி உள்ளார்