லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து : மூவர் கைது

ண்டன்

ங்கிலாந்து நாட்டின் லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்படுள்ளனர்.

இன்று காலை சுமார் 6.40 மணிக்கு லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில்  உள்ள நடைமேடையில் ஒரு சண்டை நடந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.   அப்போது கத்திக் குத்துக் காயங்களுடன் ஒருவர் அந்த நடைமேடையில் இருந்துள்ளார்.   இந்த தகவல் வெளியானதும் பயணிகளிடையே கடும் பரபரப்பு உண்டானது.

சமூக வலைத்தளமான டிவிட்டரில் “வடக்குப் பக்க நடைமேடையில் பெரிய தகராறு நடந்ததை நான் பார்த்தேன்.  அதை ஒட்டி நான் அங்கிருந்த அபாய மணியை அழுத்தியதும் காவலர்கள் வந்தனர்.  ஆனால் அதற்குள் தாக்கியவர்கள் தப்பித்து விட்டனர். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் இது தீவிரவாத சதி இல்லை எனவும் தகராறால் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவம் எனவும் இது குறித்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

”இந்த சம்பவத்தை கண்டவர்கள் 0800 40 50 40 என்னும் எண்ணுக்கு அழைக்கவும்.   மேலும் 61016 என்னும் நம்பருக்கு எஸ் எம் எஸ் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.  தகவலில் பிப்ரவரி 2 ஆம் தேதி 88 சம்பந்தமாக என குறிப்பிட வேண்டும்”  என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.