லண்டன்:

ண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த  பிரபல வைர நகை வியாபாரி யான   நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லண்டன் அமலாக்கத்துறையின் பரிந்துரையின்பேரில் தற்போது அவரை கைது செய்ய லண்டன் நீதிமன்றம்  கைது வாரண்ட் வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்துவித்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இவருக்கு வெளிநாடுகளிலும் நகைகக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2015ம் ஆண்டு நியூயார்கில் நிரவ் மோடியின் நகைக்கடையை டொனால்ட் டிரம்ப் திறந்து வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் வைர வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் வாங்கி அதை செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து,  நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால், ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிரவ்மோடி குடும்பத்துடன் எஸ்கேப் ஆனார். தற்போது அவர் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து,  நிரவ் மோடி மீதான முதல் சார்ஜ் ஷீட்டை லண்டன் உளவுத்துறையான அமலாக்கத்துறை  கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. தற்போது அதன் பரிந்துரையின்பேரில் நிரவ் மோடியை கைது செய்ய நீதிமன்றம் கைது வாரண்ட் வழங்கி உள்ளது.