விஜய் மல்லையா சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்:

இந்திய வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். நிலுவை கடன் தொகையை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதன்படி விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி 13 இந்திய வங்கிகள் லண்டன் உயர்நீதிமன்ற வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில் ஐக்கிய பேரரசில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது சொத்துக்களின் உள்ளே நுழைந்து சோதனை நடத்த அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது உள்ளே நுழையும் அனுமதிக்கான உத்தரவு மட்டும் கிடையாது. 13 வங்கிகளின் நிலுவை தொகையை வசூலிக்கும் வகையிலான பறிமுதல் நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மே மாதத்தில் மல்லையாவுக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.