ண்டன்

டந்த 1948 ஆம் ஆண்டு ஐதராபாத் நிஜாம், பாகிஸ்தானின் துணை தூதருக்கு அனுப்பிய 10  லட்சம் பவுண்ட் தொகைக்கு, உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த  1947-ஆம் ஆண்டு அப்போதைய ஐதராபாத் நிஜாம் தனது நாட்டை பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பினார். அதையொட்டி 1948 ஆம் ஆண்டு அப்போதைய ஐதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகான் பிரிட்டனில் உருவாக்கிய பாகிஸ்தான் தூதருக்கு ஐதராபாத் நிஜாம்10,07,940 பவுண்டுகள் மற்றும் ஒன்பது ஷில்லிங் பணத்தை மாற்றினார்.

ஐதராபாத்தின் எட்டாவது நிஜாம் இளவரசர் முகரம் ஜா மற்றும் இந்தியாவுடன் கைகோர்த்த அவரது இளைய சகோதரர் முபாகம் ஜாஹே, இது தங்களுக்குச் சொந்தமானது என்று கூறிக்கொண்டனர்.  ஆனால் பாகிஸ்தான் அரசும் அதற்கு  உரிமை கோரியது. இந்த நிதி தற்போது லண்டனில் உள்ள தேசிய வெஸ்ட்மின்ஸ்டர் வங்கியில் உள்ளது.

இது குறித்து லண்டனில் உள்ள ராயல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.   அந்த வழக்கில் நேற்று  நீதிபதி மார்கஸ் ஸ்மித்  நீதிபதி ஸ்மித் “இந்த நிதிக்கான பலனைப்  ஏழாவது நிஜாம் மற்றும்  அவரைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் பெற உரிமை உண்டு    இந்த விவகாரத்தில்: பாகிஸ்தானின் நியாயமற்ற கருத்துகள் காரணமாக அந்நாட்டின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது” என அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து எட்டாவது நிஜாம் சார்பு வழக்கறிஞர்  பால் ஹெவிட், “நீதிபதி ஸ்மித்தின் தீர்ப்பு ஒரு சிக்கலான வரலாற்று மற்றும் சட்ட சிக்கல்களை உள்ளடக்கியது. இந்த நிதி 70 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மைகள் மற்றும் நிகழ்வுகளை விளக்குகிறது. தற்போது அந்த நிதியின் மதிப்பு இப்போது 35  கோடி பவுண்ட் ஆகி உள்ளது. எங்கள் மனு தாரரின் தாத்தா ஏழாம் நிஜாம் தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நியாயத்தன்மை குறித்த முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், இந்த வழக்கில் விரிவான தீர்ப்பைப் பார்த்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. அத்துடன் விரிவான தீர்ப்பின் அனைத்து  அம்சங்களையும் பாகிஸ்தான் உன்னிப்பாக ஆராய்ந்த பிறகு சட்ட ஆலோசனை பெறப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.