ஜாலியன் வாலா பாக் படுகொலை : மன்னிப்பு கோரும் லண்டன் மேயர்.

 

ண்டன்

ண்டன் மேயர் சாதிக் கான் ஜாலியா வாலா பாக்கில் 1919ஆம் வருடம் நிகழ்ந்த படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த 1919ஆம் வருடம், ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் மைதானத்தில் சுதந்திரப் போராட்டத்தை முன்னிட்டு கூட்டம் நடந்தது.  அப்போது ஜெனரல் டயர் என்னும் ஆங்கிலேய தளபதி தலைமையில் பிரிட்டிஷார் துப்பாக்கி சூடு நிகழ்த்தினர்.   தப்பிச் செல்ல வழி இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்தனர்.    இது குறித்து லண்டன் மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்னும் தீர்மானம் லண்டன் நகரசபையில் நிறைவேற்றப்பட்டது.

தற்போது லண்டன் மேயர் சாதிக் கான் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.  அவர் தனது இந்திய வருகையின் போது பஞ்சாப் சென்றுள்ளார்.   அப்போது ஜாலியன் வாலா பாக் சென்று அங்கு இறந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.   அத்துடன் பிரிட்டன் நடத்திய இந்த கோடூர தாக்குதலுக்கு மன்னிப்பு கோரி உள்ளார்.    முன்னதாக அவர் அமிர்த சரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார்.   அங்கு அவர்  முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு பஞ்சாபை சேர்ந்த பல ராணுவத்தினர் உதவி புரிந்தமைக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.