லண்டன்,

சூதி அருகே வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்து,   தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய குற்றவாளியின் புகைப்படத்தை லண்டன் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்திற்கான நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், பிரிட்டனின் வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் உள்ள  மசூதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் ’தராவீஹ்’ தொழுகை நடந்தது.

தொழுகை முடிந்து மசூதியில் இருந்த ஏராளமான இஸ்லாமியர்கள் வெளியே வந்து கொண்டி ருந்தனர். அப்போது வேகமாக வேனை ஓட்டிவந்த ஒருவன், மசூதியில் வெளியேறிக் கொண்டி ருந்தவர்கள்மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடினார்.

இச்சம்பவத்தால் அங்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானால், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த திடீர் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை மடக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கார்டிப் நகரைச் சேர்ந்த டெரன் ஆஸ்பர்ன் (45) என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.