லண்டன் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கத்தை நிராகரித்தார் யோகேஷ்வர்!

புதுடெல்லி:

ண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற யோகேஸ்வர் தத்துக்கு, வெள்ளி பதக்கம் பெற்ற  பேசிக்குட்கோவ் போதை  மருந்து உண்டதாக கண்டறிய பட்டதால் அவரிடம் இருந்த வெள்ளி பதக்கம் பறிக்கப்பட்டு யோகேஷ்வர் தத்துக்கு தர முடிவெடுத்துள்ளது. ஆனால், அந்த வெள்ளி பதக்கம்  பதக்கம் வேண்டாம் என நிராகரித்துள்ளார் யோகேஸ்வர்தத்.

yogeshwar-dutt_reuters_m

கடந்த 2012 ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத், 60 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் வடகொரியாவின் ஜிம்யோங்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

இந்த தொடரில் ரஷ்யாவை சேர்ந்த பேசிக்குட்கோவ் என்பவர் வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்நிலையில் கடந்த 2013 ல் ஒரு கார் விபத்தில் சிக்கி இறந்த பேசிக்குட்கோவ் நடந்து முடிந்த போட்டியில் போதை மருந்து உண்டதாக ஒரு சோதனையில் தெரிய வந்தது.

இதனையடுத்து யோகேஷ்வர் தத் வெண்கல பதக்கம் வெள்ளி பதக்கமாக மாற்றப்பட  இருப்பதாக செய்திகள் வந்தது.  அதையடுத்து அவருக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்படுவதாக  சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.

ஆனால், அந்த பதக்கத்தை பெற யோகேஸ்வர்தத் மறுத்து விட்டார். அந்த பதக்கம்  பேசிக்குட்கோவ் குடும்பத்திரிடமே இருக்கட்டும் என்று கூறி உள்ளார்.

மேலும் இந்த வெள்ளி பதக்கத்தை  இந்திய மக்களுக்கு அர்பணிப்பதாகவும் கூறி உள்ளார். ஏற்கனவே  பேசிக்குட்கோவ் பற்றி கூறுகையில், ‘மிகச்சிறந்த மல்யுத்த வீரர்’  என்று அவரை யோகேஷ்வர் தத் புகழ்ந்தது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.