சீனா எல்லை அருகே உத்தரகாண்டில் பாலம் உடைந்து விபத்து!

டேராடூன்:

த்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி பாலம் இன்று காலை உடைந்து விழுந்தது. இந்த பாலம் சீனா எல்லை அருகே உள்ள கிராமங்களை இணைக்கும் இரும்பு பாலமாகும்.

இந்த பாலம் உடைந்ததன் காரணமாக எல்லைப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.

பாலத்தின் மீது இரண்டு லாரிகள் ஒரே நேரத்தில் சென்றதால், எடை தாங்க முடியாமல் பாலம் உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

இந்த கங்கோத்ரி பாலம் உத்தரகாண்டில் உள்ள  உத்தர்காசி மாவட்டத்தையும், சீன எல்லையில் உள்ள கிராமங்களையும் இணைத்துள்ளது. இன்று காலை சுமார் 6 மணி அளவில், அதிக பாரம் காரணமாக இந்த இரும்பு பாலம் உடைந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த ஆற்றில் தண்ணீர் அதிகம் இல்லாததாலும், அதிகாலை நேரம் என்பதால் வேறு யாரும் அந்த வழியே செல்லாததாலும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த பாடல் உடைந்ததன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள், உத்தரகாசிக்க வர முடியாத நிலை உள்ளது. இந்த ஒரு பாலத்தை மட்டுமே நம்பி இருந்த கிராம மக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அந்த இரும்பு பாலத்தில் ஒரே சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிப்பு உள்ள நிலையில் இரண்டு லாரிகள் சென்றதன் காரணமாக, பாரம் தாங்காமல் அந்த இரும்பு பாலம் உடைந்துவிழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து,உத்தர்காசி டிஸ்டிரிக் நீதிபதி சவுகான் கூறும்போது, விதிகளை மீறி சென்ற வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் மாற்று பாதை விரைவில் அமைத்துத் தரப்படும் என்றும் கூறி உள்ளார்.