உலகக்கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே நடுவர்!

மும்பை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள நடுவர்கள் பட்டியலில், இந்தியாவிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒரே நபர் சுந்தரம் ரவி.

வருகிற மே மாதம் 30ம் தேதி துவங்கி, சுமார் 1.5 மாதங்கள் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளில், இந்தியா போன்ற ஒரு பெரிய கிரிக்கெட் நாட்டிலிருந்து, ஒரேயொரு நடுவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதானது கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஆனால், இந்த சுந்தரம் ரவி, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியவர். ஐபிஎல் தொடரில், மும்பை – பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், கடைசிப் பந்தில், நோ-பால் போடப்பட்டதை கவனிக்கத் தவறினார் இந்த நடுவர்.

அந்தப் போட்டியில், பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது. இதனால் கோபமடைந்த பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, நடுவர்கள் தங்களின் கண்களைத் திறந்து வைக்க வேண்டுமென விமர்சனம் செய்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-