விஞ்ஞானிகளின் கணிப்பையும் தாண்டி நீடிக்கும் ஆன்டிபாடி வழி கொரோனா எதிர்ப்பு செயல்பாடுகள்

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தில் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் குறைந்தது நான்கு மாதங்கள் வரையேனும் வைரஸை எதிர்த்து போராடலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால், பொதுவாக ஆன்டிபாடி வழி செயல்பாடுகள் மிகக் குறைந்த நாட்களே நீடிக்கும் என முந்தைய அறிக்கைகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய அறிக்கையின்படி, இது குறித்து ஐஸ்லாந்தில் 30,000 க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின்  செயல்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சோதனையில் ஒன்றான இதன் முடிவுகள் தடுப்பு மருந்து தயாரிப்பு முயற்சிகளுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கும் செய்தி.

இயற்கையாக தோன்றும் நோய் தொற்றைப் போல தடுப்பு மருந்துகளும் நீடித்து செயல்படும் ஆன்டிபாடி செயல்பாடுகளைத் தூண்டுமானால், விரைந்து வரவும் வைரஸ்களை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிகிறது என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்கள் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போதைய கொரோனா வைரஸ் தோற்று எதிர்கால நோய் பரவல்களிடமிருந்து மகளை பாதுகாக்குமா, இருந்தாலும் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் விடைகான முடியாத கேள்விகளில் ஒன்றாக உள்ளது.   மேற்கொள்ளப்பட்ட சிறிய அளவிலான சில ஆய்வுகள் தூண்டப்படும் ஆன்டிபாடிகள் வழி வைரஸ் எதிர்ப்பு செயல்பாடுகள் மிக விரைவாக மறைந்துவிடும் என்றும், குறைவான அல்லது அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு ஆன்டிபாடிகள் உருவாக்கம் இருக்காது எனவும் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போதைய ஆய்வு முடிவுகள் முற்றிலும் வேறாக உள்ளது. இந்த புதிய ஆய்வை அமெரிக்க பயோடெக் நிறுவனமான ஆம்பனின் துணை நிறுவனமான ரெய்காவிக் சார்ந்த டிகோட் ஜெனடிக்ஸ், ஐஸ்லாந்தில் பல மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து இங்கே அதன் மக்கள்தொகையில் 15 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இங்கே முதல் கோவிட் -19 நோயாளி கண்டறியப்பட்டபோது, ஒப்பீடுகளுக்கு உறுதியான தளத்தை அளித்தது. விஞ்ஞானிகள் இரண்டு வகையான கொரோனா வைரஸ் பரிசோதனையைப் பயன்படுத்தினர்: மூக்கு துணியால் அல்லது வைரஸின் இருப்பை கண்டறியும் பிற மாதிரிகள். மேலும், இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளை அளவிடும் சோதனைகள் முதலியவை மேற்கொள்ளப்பட்டன.

புதிய ஆய்வுமுடிவுகளானது, பல வகையான ஆன்டிபாடிகல் இருக்கும் சூழ்நிலையில் எவ்வளவு அல்லது எந்த வகையான ஆன்டிபாடி நோய் எதிர்ப்பு சக்தி அல்லது பாதுகாப்பை அளிக்கிறது என்பதை நிறுவவில்லை – அது இன்னும் அறியப்படவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் போன்ற குறிப்பிட்ட குழுக்களின் அடிப்படையில் பல ஆய்வுகள் இறப்பு விகிதங்களை அறிக்கையிட்டிருந்தாலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான, ஒட்டுமொத்த இறப்பு விகிதம் இன்னும் தெரியவில்லை. இயற்கையாக உருவான ஆன்டிபாடிகள் விரைவில் மறைந்துவிடாது என்ற செய்தி “தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு  ஊக்கமளிக்கும்” என்று ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி டாக்டர் அங்கஸ் கூறினார்.