உலகிலேயே நீளமான கூந்தல்: கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த குஜராத் மாணவி (வீடியோ)
டில்லி:
உலகிலேயே நீளமான கூந்தல் வைத்துள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளது.
கலாச்சாரத்திற்கும், பண்பாட்டும் பெயர்போனது இந்தியா. ஆனால், சமீப காலங்களாக பண்பாடு, கலாச்சாரம் விலை என்ன? என்ற அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய கலாச்சாரத்தை பேணி காத்திடும் வகையில் நீண்டமான கூந்தலை வளர்த்து வருகிறார் குஜராத்தில் உள்ள மாணவி ஒருவர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் , 16வயதே ஆகும் இந்த மாணவியின் கூந்தல் நீளம், 5 அடி 7 அங்குலம். இவர் கூந்தல் மீது உள்ள மோகம் காரணமாக. கடந்த 10 ஆண்டுகளாக முடியை பேணி பாதுகாத்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கின்னஸ் அதிகாரிகள் நிலான்ஷியின் கூந்தலை அளந்து, அவரது கூந்தல்தான் உலகிலேயே நீளமான கூந்தல் என அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
தனது கூந்தல் பராமரிப்பு குறித்து கூறிய நிலான்ஷி, தனது தாயின் உதவியுடன் வாரம் ஒருமுறை சுத்தமான நீரில் அலசி பராமரித்து வருவதாகவும், இவ்வளவு நீளமான முடி இருப்பது குறித்து தான் என்றைக்குமே வருத்தப்பட்டது கிடையாது என்றும் தெரிவித்து உள்ளார். தற்போது கிடைத்துள்ள கின்னஸ் சாதனை தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் அவர் கூறுகிறார்.
Credit: Guinness world records
நிலான்ஷியின் தலைமுடியின் அழகை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்