சென்னை:

மமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியை சேர்நத்  சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சசிகலா  சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு பாருங்கள் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் கமிஷன் கூறியதை, நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

அதைத்தொடந்து உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில்,  அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

இந்த நிலையில் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்து இன்று அமமுக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டதில் அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், இன்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.

இதுபற்றி, அமமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக  தெரிவித்தார்.

மேலும்,  சிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அவர் அமமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் சிஆர் சரஸ்வதி தெரிவித்தார்.

மேலும், சசிகலா  சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு பாருங்கள், அமமுகவின் அதிரடி திட்டம் என்ன என்பது தெரிய வரும் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ் செல்வன்,  சின்னமா சசிகலா ஒப்புதலுடன் தான் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு  செய்யப்பட்டார் என்று கூறினார்.