காலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….

நெட்டிசன்

Nambikai Raj முகநூல் பதிவு

காலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்!

2017ஆம் ஆண்டு உத்திர பிரதேச அரசு வெளியிட்ட சுற்றுலா தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது. ‘தாஜ்மஹால் இந்திய கட்டிடக்கலை முறையில் கட்டப்படாததால் அதை நீக்கினோம்’ என விளக்கம் கொடுத்தார் அந்த மாநில முதல்வர் ஆதித்யநாத்.

நேற்று அதே தாஜ்மஹாலை பார்வையிட வந்த டிரம்ப் தம்பதியிருக்கு தாஜ்மஹால் முன்பு எடுக்கப்பட்ட படத்தையே பரிசாக கொடுக்க வேண்டிய நிலை.

அரசியல் வேறு யதார்த்தம் வேறு.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Look how strange the time is!, Tajmahal, trump. டிரம்ப், yogi, தாஜ்மஹால், யோகி!
-=-