உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கோட்பாடுகளில் தீர்வு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகம் சந்தித்து வரும் பெரிய பிரச்னைகளுக்கு, புத்தரின் கோட்பாடுகளில் தீர்வு இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, ஆஷாத பூர்ணிமா தர்ம சக்ரா திவஸ் விழாவை, சர்வதேச புத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. அதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலகம் இன்று பெரிய சவாலை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. அதற்கான தீர்வுகள், புத்தரின் கொள்கைளில் உள்ளது. அவை கடந்த காலத்துக்கு மட்டுமல்ல, இப்போதும் பொருத்தமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது. புத்தரின் போதனைகள், எண்ணங்களை, எப்போதும் இளைஞர்கள் மனதில் கொள்ளவேண்டும். இதன் மூலம் புத்துணர்வு, அமைதி, ஊக்கம் கிடைக்கும்.

திறமையான இளைஞர்கள் மனதில் உலக பிரச்னைகளுக்கு தீர்வு இருக்கிறது. புத்த தலங்களை இணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று பேசினார்.