ஈரோட்டில் லாரிக்கு தீ வைப்பு! கன்னட வெறியர்கள் காரணமா?

--

1fire-4

ஈரோடு

ரோட்டில் கர்நாடக பதிவு எண் உள்ள லாரி ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியில் பெங்களூரிலிருந்து ஜவுளி ஏற்றிக்கொண்டு ஈரோடு வந்வத லாரி மர்மநபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த லாரி  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள திருநகர் காலனியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் லாரி என தெரிய வந்துள்ளது. கர்நாடக பதிவென்னுடன் வந்ததால் லாரிக்கு தீ வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த லாரியை காரமடையை சேர்ந்த சுரேஷ் என்பவர் நேற்று ஓட்டி வந்தார். நள்ளிரவில் சந்தைமேடு பகுதியில் வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் லாரியை வழிமறித்து தீ வைத்தனர்.

இதனையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

விசாரணையில் லாரியை தொடரந்து கார் ஒன்று கர்நாடகத்தில் இருந்து வந்துள்ளது. தமிழக எல்லைப்பகுதிக்குள் லாரி வந்து சிறிது நேரத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து, காரில் வந்த மர்ம நபர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.