சென்னை

ரக்கு வாகனத்தின் இன்சூரன்ஸ்  பிரிமியம் உயர்த்தப்பட்டதை ஒட்டி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் சரக்கு வாகனங்கள் மீதான இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்த்தப் பட்டது.   இதை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்குதல் செய்தார்.

அவர் தனது மனுவில், “பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.   வருமானத்தில் சுமார் 75% எரிபொருளுக்கு செலவாகி விடுகிறது.  மீதமுள்ள தொகையில் தான் மற்ற செலவுகளை செய்ய வேண்டி உள்ளது.   இந்நிலையில் இன்சூரன்ஸ் பிரிமியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட உள்ளது.   இதனால் இன்சூரன்ஸ் நிறுவனஙகள் அறிவித்துள்ள 439% முதல் 1117% உயர்வை ரத்து செய்ய வேண்டும்.   எங்கள் தொழிலை காக்க வேண்டும்”  என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணயத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.