பேச்சுவார்த்தையில் உடன்பாடு….லாரி ஸ்டிரைக் வாபஸ்

டில்லி:

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பெட்ரோல் -டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து பாதித்தது.

இந்நிலையில் டில்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளர் மாலிக் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.