திருப்பதி அருகே டீக்கடையில் லாரி புகுந்தது! 15 பேர் பலி! 25க்கும் மேற்பட்டோர் காயம்!!

திருப்பதி,

திருப்பதி செல்லும் வழியில் காளஹஸ்தி அருகே எர்வாடி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள  டீக்கடையில் லாரி புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டீக்கடை மற்றும் பக்கத்தில் இருந்த கடைகளில் நின்றுகொண்டிருந்த சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் மீது லாரி மோடி விபத்து ஏற்பட்டது.

இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே ஏர்பேடு பகுதியிலுள்ள டீக்கடையில் இன்று மதியம் எதிர்பாரவிதமாக கடைகளின் முன் நின்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி புகுந்தது.

இந்த கோர விபத்தில், அங்கு பேருந்துக்காக நின்றவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை  மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர்  அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சித்தூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வில்லை. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed