தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் வாபஸ்

சென்னை:

தமிழக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த் திரும்ப பெறப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து கடந்த 18ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சுகுமார் கூறுகையில், ‘‘பெங்களூருவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக மத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது’’ என்றார்.