உலகக் கோப்பை அரை இறுதி : மீண்டும் திரும்பும் சரித்திரம்

ண்டன்

கடந்த 2008 ஆம் வருடம் 19 வயதுக்கு குறைந்தோருக்கான அரை இறுதி போட்டிக்கும் தற்போதைய அரை இறுதிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா அரை இறுதி தகுதிச் சுற்றில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. நான்காம் இடத்தில் உள்ள நியுஜிலாந்து அணியுடன் இந்திய அணி வரும் 7 ஆம் தேதி முதல் அரை இறுதியில் மோதுகிறது.

இதைப் போல் கடந்த 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியாவும் நியுஜிலாந்தும் மோதின. அப்போது இந்திய அணிக்கு விராட் கோலி தலைவராகவும் நியுஜிலாந்து அணிக்கு வில்லியம்சன் தலைவராகவும் உள்ளனர். அந்த போட்டியில் இந்தியா 3 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

அதே சரித்திரம் மீண்டும் திரும்புகிறது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை 2019 இன் அரை இறுதிப் போட்டியில் மோதும் இந்திய அணிக்கு விராட் கோலி தலைவராகவும் நியுஜிலாந்து அணிக்கு வில்லியம்சன் தலைவராகவும் உள்ளனர். ரசிகர்கள் அதே வெற்றி தற்போதும் கிடைக்கலாம் என ஊகம் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி