சென்னை அணியின் பேட்டிங்கில் இத்தனை ஒற்றுமை பார்த்தீர்களா..!

--

துபாய்: ‍பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில், சென்னை அணியின் பேட்டிங்கில் பல ஒற்றுமைகள் காணப்பட்டன.

பஞ்சாப் அணி நிர்ணயித்த 179 ரன்கள் என்ற இலக்கை விரட்ட களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஜோடிகளாக களமிறங்கியவர்கள் ஷேன் வாட்சன் மற்றும் ஃபாஃப் டூ பிளசிஸ். இந்த இருவருமே வெளிநாட்டு வீரர்கள்.

அடுத்து, இவர்கள் இருவருமே சந்தித்த பந்துகள் தலா 53. இவர்கள் இருவருமே அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை தலா 11. நேற்று பஞ்சாப் அணி கூடுதலாக விட்டுக்கொடுத்த ரன்களின் எண்ணிக்கையும் 11.

துவக்க வீரர்கள் இருவருமே 80+ ரன்களை (ஷேன் வாட்சன் 83 & டூ பிளசிஸ் 87) ரன்களை எடுத்தனர். அடித்த சிக்ஸர்கள் எண்ணிக்கையில் மட்டுமே இருவருக்கும் வேறுபாடு காணப்பட்டது.