காஷ்மீர் : தீவிரவாத இயக்கத்தில் இணையும் இளைஞர்கள்

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் இந்த வருடம் சுமார் 42 பேர் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வ்ருகின்றன.    கடந்த இரு வாரங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக காவல்துரை அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.   இதற்கு காரணம் தற்போது பல இளைஞர்கள் தீவிரவாத இயக்கந்த்தில் இணைவதால் என சொல்லப்படுகிறது.  கடந்த 2011 முதல் தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் இணைவது குறைந்திருந்த போது தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

இது குறித்து காஷ்மீர் மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “தற்போது தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் இணைவது அதிகரித்து வருகிறது,   இது ஆரோக்யமானது அல்ல.  சென்ற வருடம் சுமார் 147 பேர் இவ்வாறு இணைந்துள்ளனர்.    தீவிரவாத இயக்கங்களில் அதிக அளவில் ஆட்கள் இணையும் போது தீவிர வாத செயல்களும் அதிகரிக்கின்றன.

இந்த வருடம் இதுவரை சுமார் 42 பேர் வரை தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்.   அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த 45 நாட்களுக்குள் இணைந்தவர்கள் ஆகும்.   இதனால் கடந்த இருவாரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் மிகவும் அதிகரித்துள்ளன.    நமது ராணுவத்தினர் தீவிரவாதிகளைக் கொல்லும் போது அதே அளவில் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைகின்றனர்.” என வருத்தத்துடன் கூறினார்.