சென்னை:

டந்த வாரம் சென்னை மற்றும் கோவையில் பிரபலமான வணிக நிறுவனங்களுக்கு சொந்தமா சுமார் 74 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனைகளின் முடிவில், ரூ.433கோடி அளவிலானவரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், கணக்கில் வராத ரூ.25 கோடி கறுப்பு பணம் மற்றும் 12கிலோ தங்கம் உள்பட ஏராளமான வைர கற்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோட்டஸ் குரூப்

கடந்த ஜனவரி மாதம்  29, 30, 31 ஆகிய 3 நாட்கள் சென்னை மற்றும் கோவையில் உள்ள கட்டுமான நிறுவனமான லோட்டஸ் குழுமம், பாடி சரவணா ஸ்டோர்ஸ், பெரம்பூர் ரேவதி, ஜி ஸ்கொயர் உள்பட  74 இடங்களில்  அதிரடி வருமான வரி சோதனை நடைபெற்றது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையில்,   வரி ஏய்ப்பு தொடர்பாக ஆவணங்கள், கணக்கில் வராத நகை, பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கடந்த 6 நாட்களாக கணக்கிடுதல், மதிப்பிடுதல் மற்றும் ஆய்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

சரவணா 1

இந்த  வருமான வரி சோதனையின் வாயிலாக 433 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் கணக்கில் வராத பணம் 25 கோடி ரூபாய், தங்கம் 12 கிலோ, வைரம் 626 கேரட் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.